தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் - கைக்குழந்தைகளுடன் நீண்ட வரிசையில் காத்திருந்த பெண்கள்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் தாலிக்கு தங்கம் பெற பெண்கள் கூட்டம் அலைமோதியது.
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் - கைக்குழந்தைகளுடன் நீண்ட வரிசையில் காத்திருந்த பெண்கள்
x
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் தாலிக்கு தங்கம் பெற பெண்கள் கூட்டம் அலைமோதியது. தாலிக்கு தங்கம் திட்டத்திற்காக, விண்ணப்பித்த ஏராளமானோர், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தில் குவிந்தனர். காலை முதல், நீண்ட வரிசையில் பெண்கள், காத்திருந்த நிலையில் முறையான முன்னேற்பாடுகள், இல்லாததால் அவதிக்குள்ளாயினர். தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியை, அதிகாரிகள் பொதுவாக, திருமண மண்டபத்தில் நடத்துவார்கள் என்றும், அந்த செலவை குறைக்க, அலுவலகத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பெண்கள் புகார் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்