மெரினா கடற்கரையில் மாநகராட்சி ஆணையர் நடைபயிற்சி...

சென்னை உயர் நீதிமன்ற அறிவுரைப்படி மெரினா கடற்கரையில், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆய்வு நடத்தினார்.
x
சென்னை மெரினா கடற்கரையை ஆக்கிரமித்து மீன் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அவற்றுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. மெரினாவை சுத்தப்படுத்த திட்டம் வகுக்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.  இந்த நிலையில், மெரினாவை சுத்தப்படுத்தும் பணியை ஆய்வு செய்யும் வகையில் ஒரு மாதத்திற்கு, தினமும் அங்கு காவல் துறை ஆணையருடன், நடைபயற்சி மேற்கொள்ளும் படி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் ஆலோசனை அளித்திருந்தனர். இந்நிலையில், இன்று   மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், அதிகாரிகளுடன் நடைபயிற்சி மேற்கொண்ட படியே ஆய்வு மேற்கொண்டு, உரிய ஆலோசனைகளை வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்