மயிலாப்பூர் கோயில் சிலைகள் விவகாரம் : அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளுக்கு ஜாமீன்

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிலைகள் மாற்றப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மயிலாப்பூர் கோயில் சிலைகள் விவகாரம் : அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளுக்கு ஜாமீன்
x
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிலைகள் மாற்றப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிலைகள் மாற்றப்பட்ட விவகாரத்தில், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளை நேற்று போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து, கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில், இன்று காலை, திருமகள் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது உச்சநீதிமன்றத்தில் திருமகளுக்கு ஜாமீன் பெற்று வரப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் குப்புசாமி தெரிவித்தார். இதையடுத்து தினந்தோறும் திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் அலுவலகத்தில் திருமகள் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், திருமகளுக்கு ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து பிற்பகல் 1.25 மணிக்கு திருமகள் தனது சொந்த காரில் புறப்பட்டு சென்றார்.

Next Story

மேலும் செய்திகள்