மகள் மரணத்தில் நிச்சயம் நீதி கிடைக்கும் - டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் தந்தை

எத்தனை வருடங்கள் ஆனால் வழக்கை விட மாட்டேன் என டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
x
தன் மகள் விஷ்ணுபிரியாவின் மரணம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் நிச்சயம் நீதி கிடைக்கும் என அவரின் தந்தை ரவி தெரிவித்தார். டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இறுதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிபிஐ இந்த வழக்கை தொடர்ந்து விசாரிப்பதோடு, 6 மாத காலத்திற்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து செய்தியாளரிடம் பேசிய விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, எத்தனை வருடங்கள் ஆனாலும் வழக்கை விடப்போவதில்லை என்றார். மேலும் நீதிமன்றத்தில் நிச்சயம் நீதி கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்