பொன். மாணிக்கவேல் நியமன உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு...

சிலை கடத்த​ல் தடுப்புப் பிரிவு தலைவராக பொன் மாணிக்கவேலை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
x
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அசோன் பூசன், நாகேஸ்வர ராவ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பிரல் ஆஜரான வழக்கறிஞர், சிலை கடத்தல் வழக்கில் சர்வதேச தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியதாக  தெரிவித்தார். மேலும், அந்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம்  ரத்து செய்ததோடு, ஓய்வு பெற்ற அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு பதவி நீட்டிப்பு வழங்கி சிறப்பு அதிகாரியாக நியமித்தது செல்லாது என்றும் வாதிட்டார். ஓய்வு பெற்ற அதிகாரியை விசாரணை அதிகாரியாக நியமிக்க சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் வாதிட்டார். இதனைத் தொடர்ந்து, யானை ராஜேந்திரன் உள்ளிட்டோர் பதில் மனுதாக்கல் செய்ய 4 வார காலம் அவகாசம் அளித்த நீதிபதிகள், அடுத்த மாதத்துக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். மேலும், அடுத்த விசாரணையின்போது, தமிழக அரசு கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறிய நீதிபதிகள், பொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்