"தாழ்த்தப்பட்டோர் அமைப்புகள் சேர்வது கற்பனை" - பா.ரஞ்சித் யோசனை குறித்து இல.கணேசன் கருத்து

தனித்தனியாக இருக்கும் பட்டியலின அமைப்புகள் சேர்வதென்பது கற்பனை என பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
x
தனித்தனியாக இருக்கும் பட்டியலின அமைப்புகள் சேர்வதென்பது கற்பனை என பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார். கலைவாணர் அரங்கில் 2 வது நாளாக நடந்த பாரதி விழாவில், நடனம் ஆடிய நடிகர் வினித்திற்கு   பொன்னாடை அணிவித்து இல.கணேசன் பாராட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனித்தனி பட்டியலின கட்சிகள் சேர்ந்து போட்டியிட வேண்டும் என்பதெல்லாம் ஆசை, கற்பனைகள் என்றும், அவை ஒன்றாக வருவது அரிது என்றும் இல. கணேசன் தெரிவித்துள்ளார். பல்வேறு காரணங்களுக்காக பட்டியல் இன அமைப்பினர் வேறுபட்டு இருக்கிறார்கள் என்றும், அவர்களின் பிரிவுகளுக்கு உள்ளே ஒற்றுமை ஏற்படுமானால் அதனை வரவேற்பதாகவும் இல.கணேசன் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்