3 சிலைகளை திருடியவருக்கு நீதிமன்ற காவல் : போலீசார் குற்றவாளிகளை தேடுதல் பணியில் தீவிரம்

கோயில் சிலைகளை திருடியவரை போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
3 சிலைகளை திருடியவருக்கு நீதிமன்ற காவல் : போலீசார் குற்றவாளிகளை தேடுதல் பணியில் தீவிரம்
x
கோயில் சிலைகளை திருடியவரை போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் மாரியம்மன் கோயிலில் கடந்த 2017 ஆம் ஆண்டு திருடு போன 5 உலோகச் சிலைகளை போலீசார் தேடி வந்தனர். இதில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு கோயில் அருகே உள்ள குளத்தை தூர்வாரியபோது 2 சிலைகளை மீட்டனர். இந்நிலையில் மீதமுள்ள 3 சிலைகளை தேடி வந்த நிலையில், போலீசார் விசாரணையில் சிறுபுலியுர் கிராமத்தைச் சேர்ந்த அகிலன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கும்பகோணம் நீதிமன்ற காவலில் ஒப்படைத்தனர். மீதமுள்ள குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்