சேதமடைந்த படகுகளுக்கு முழு நிவாரணம் வழங்காவிட்டால் போராட்டம் - வேதாரண்யம் மீனவர்கள்

புயலில் சேதமடைந்த படகுகளுக்கு அரசு முழு நிவாரணம் வழங்காவிட்டால் போராட்டம் என வேதாரண்யம் மீனவர்கள் அறிவிப்பு
x
நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் நாகை மீனவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம்,  செருதூரில் நடைபெற்றது. இதில்  வேளாங்கண்ணி, காமேஸ்வரம், புஷ்பவனம், ஆற்காட்டுதுறை உள்ளிட்ட 12 கிராம மீனவ பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதில், கஜா புயலால் சேதமடைந்த விசைப்படகுகளுக்கு 60 லட்சம் ரூபாயும், பைபர் படகுகளுக்கு 9 லட்சம் ரூபாயும் நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், முழுமையாக சேதமடைந்த படகுகளுக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கிய அரசுக்கு கண்டனம் தெரிவித்த மீனவர்கள், சேதமடைந்த படகுகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்