நான் தமிழில் பேச தினத்தந்தி நாளிதழ் தான் காரணம் - ஆட்சியர் ரோகிணி
மகாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்த தான் தற்போது தமிழில் பேசி வருவதற்கு தினத்தந்தி நாளிதழுக்கு முக்கிய பங்கு உண்டு என ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு, தினத்தந்தி கல்வி நிதி திட்டத்தின் கீழ் தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் 10 மாணவ மாணவிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது. தினத்தந்தி கல்வி நிதியை பயனாளிகளுக்கு வழங்கிப் பேசிய ஆட்சியர் ரோகிணி, மகாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்த தான், தற்போது தமிழில் பேசி வருவதற்கு தினத்தந்தி நாளிதழுக்கு முக்கிய பங்கு உண்டு என்று தெரிவித்தார்.
Next Story