பள்ளிகளுக்கு மழை விடுமுறை அறிவிப்பதில் கட்டுப்பாடு...
மழைக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில், புதிய கட்டுப்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை விதித்துள்ளது.
* மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை விடப்படுகிறது. சமீபத்தில் கஜா புயலால், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டன.
* இந்த நிலையில், விடுமுறை அறிவிப்பதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து, மாவட்ட ஆட்சியர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
* அந்த உத்தரவில், வெள்ளம் ஏற்பட்டு, போக்குவரத்து முடங்கும் சூழல் உருவானால் மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும் எனவும் மிதமான மழையோ அல்லது துாறலோ இருந்தால் விடுமுறை அறிவிக்க கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.
* மாவட்ட நிலைமையை, முதன்மைக் கல்வி அதிகாரிகள் நன்றாக ஆய்வு செய்து, விடுமுறை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனவும்
* பள்ளி திறப்பு நேரத்துக்கு 3 மணி நேரத்திற்கு முன்பாக முடிவெடுத்து, விடுமுறை அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே விடுமுறை விட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
* ஒட்டு மொத்தமாக மாவட்டம் முழுவதும் விடுமுறை அறிவிக்க கூடாது எனவும் அடிக்கடி விடுமுறை விடுவதால், மாணவர்களின் கல்வி பாதிக்கும் என்பதை உணர்ந்து ஆட்சியர்கள் செயல்பட வேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Next Story