உண்டியல் சேமிப்பை கஜா புயல் நிவாரணமாக வழங்கிய பள்ளி மாணவர்கள்

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக துவங்கப்பட்ட பள்ளி குழந்தைகள் தாங்கள் சேர்த்து வைத்திருந்த பணத்தை கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உண்டியல் சேமிப்பை கஜா புயல் நிவாரணமாக வழங்கிய பள்ளி மாணவர்கள்
x
சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக கடலூர் சாமியார் பேட்டை பகுதியில் 2004ஆம் ஆண்டில் ஈஷா வித்யா பள்ளி துவங்கப்பட்டது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் உண்டியல் கொடுக்கப்பட்டு அவற்றில் சேமிக்கும் பணம் ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு நல்ல காரியத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. 

இந்த நிலையில் நடப்பாண்டில் உண்டியல் மூலம் சேர்த்த 20 ஆயிரத்து 520 ரூபாய் பணத்தை காசேலையாக எடுத்து அதனை கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் அளித்தனர். அந்த நிதியை கஜாபுயலால் பதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்