மணப்பாறை : மாரியம்மனுக்கு பூக்குழி இறங்கிய அய்யப்ப பக்தர்கள்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த செவலூரில் இந்தாண்டும் வழக்கமான உற்சாகத்துடன் அய்யப்ப பக்தர்கள் மாரி அம்மனுக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மணப்பாறை : மாரியம்மனுக்கு பூக்குழி இறங்கிய அய்யப்ப பக்தர்கள்
x
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த செவலூரில் இந்தாண்டும் வழக்கமான உற்சாகத்துடன் அய்யப்ப பக்தர்கள் மாரி அம்மனுக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழா நேற்று காலை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து சின்ன மற்றும் பெரிய மாரியம்மன் சப்பரம் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை அடைந்தது. சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து,  கோவில் முன்பு அமைக்கப்பட்டி இருந்த குண்டத்தில் ஐயப்பனுக்கு மாலை அணிந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஐயப்பா கோசத்துடன் பூக்குழி இறங்கினர். இதைத் தொடர்ந்து அய்யப்பனுக்கு தீபாராதனை காட்டிய பின்னர், பஜனை நிகழ்ச்சி நள்ளிரவு வரை நடந்தது. 

Next Story

மேலும் செய்திகள்