400 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் பறிமுதல் - 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

திருச்செங்கோடு அருகே 400 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
400 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் பறிமுதல் - 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே 400 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி,  வரப்பாளையம் பகுதியில் மருந்தியல் துறை அதிகாரி புஷ்பராஜ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டிருந்தனர். அப்போது அரசு பேருந்து மூலம் பெங்களூருவில் இருந்து கொண்டுவரப்பட்ட 9 மூட்டைகளை  வேனிற்கு மாற்றி கொண்டிருந்த மூன்று பேர் அதிகாரிகளை கண்டதும் தப்பியோடியுள்ளனர். அவற்றை ஆய்வு செய்ததில் மூட்டைகளில் குட்கா பொருள் இருப்பது கண்டறியப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்