85% சேத கணக்கெடுப்பு பணிகள் நிறைவு - ககன்தீப்சிங்

தஞ்சாவூரில் 85 சதவீத சேத கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டதாக வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.
85% சேத கணக்கெடுப்பு பணிகள் நிறைவு - ககன்தீப்சிங்
x
தஞ்சாவூரில் 85 சதவீத சேத கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டதாக  வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரங்களை அகற்றுவதற்காக தஞ்சாவூரில் ககன்தீப்சிங் பேடி தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மரவியாபாரிகள், செங்கள் சூளை உரிமையாளர்கள் மற்றும் செய்தித்தாள் காகித நிறுவனம், வனத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோருடன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையும் கலந்து கொண்டார். இதில் சரிந்த மரங்களை அகற்றி அவற்றை உபயோகமாக பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்