சிலை கடத்தல் வழக்கு: "அபய்குமார் சிங் நியமனம் முறையற்றது"

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியது தொடர்பான தீர்ப்பில் பல அதிரடி கருத்துகளை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிலை கடத்தல் வழக்கு: அபய்குமார் சிங் நியமனம் முறையற்றது
x
சிலைக் கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு பிறப்பித்த தீர்ப்பில், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள், தமிழகத்தில் உள்ளதாகவும், இந்த கோவில்களுக்கு சொந்தமான மதிப்புமிக்க சிலைகள், புராதன பொருட்களை பாதுகாக்க வேண்டிய கடமையில் இருந்து இந்து சமய அறநிலையத் துறை தவறி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். 

திருடப்பட்ட சிலைகளை மீட்கவே, ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் தலைமையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு செயல்பட வேண்டும் என உத்தரவிட்டதாகவும் அவர் மீது இந்த நீதிமன்றம் வைத்துள்ள நம்பிக்கையில் அணு அளவு கூட குறையவில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். 

நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறாமலும், சி.பி.ஐ.யின் கருத்தைக் கேட்காமலும் வழக்குகளை மாற்றி பிறப்பித்த அரசாணை சட்ட விரோதமானது எனவும், வெறும் யூகங்களின் அடிப்படையில், நான்கு அதிகாரிகளால் ஒரே நாளில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் கடுமையாக சாடினர். 

பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக அரசு எந்த ஒரு குற்றச்சாட்டையும் கூறவில்லை எனவும், கொள்கை முடிவு என்ற பெயரில் சட்ட விரோதமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்வதாகவும் தீர்ப்பளித்தனர். 
மேலும், பொன் மாணிக்கவேலை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமித்த நீதிபதிகள், அவர் மீதோ, அவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளுக்கு எதிராகவோ நீதிமன்ற ஒப்புதல் இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டதோடு

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங்கை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவு முறையற்றது எனவும்  அதிருப்தி தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்