ஆயுள் கைதி இல்லற வாழ்வு நடத்த இரண்டு வாரம் பரோல் - உயர் நீதிமன்றம் உத்தரவு

கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் கைதி இல்லற வாழ்வு நடத்த இரண்டு வாரம் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆயுள் கைதி இல்லற வாழ்வு நடத்த இரண்டு வாரம் பரோல் - உயர் நீதிமன்றம் உத்தரவு
x
* நெல்லையை சேர்ந்த பெருமாள் என்பவர், கொலை வழக்கில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இல்லற வாழ்வுக்காக 2 வாரம் பரோல் வழங்கக் கோரி அவரது மனைவி முத்துமாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செல்வம், ராமதிலகம் அடங்கிய அமர்வு, உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டி, டிசம்பர் 15 முதல் 29 ஆம் தேதி வரை 2 வாரம் பரோல் வழங்கி உத்தரவிட்டது. 

* சிறைத்துறை அதிகாரிகள் விதிக்கும் நிபந்தனைகளை  பின்பற்ற வேண்டும் என பெருமாளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அவரது பாதுகாப்பை உறுதி செய்யவும் அறிவுறுத்தினர். இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்