ஸ்டாலின் மீதான அவதூறு வழக்குக்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்டாலின் மீதான அவதூறு வழக்குக்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் மாதம் சேலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில்  முதலமைச்சரை விமர்சித்து பேசியதாக, ஸ்டாலின் மீது, அரசு வழக்கறிஞர் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.   சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்ட நிலையில், இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், விசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததுடன், வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்