பராமரிப்பின்றி கிடக்கும் ஆண்டாள் கோயில் குளங்கள்...

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோயில் குளங்களை சீரமைக்கக் கோரிய வழக்கில், அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பராமரிப்பின்றி கிடக்கும் ஆண்டாள் கோயில் குளங்கள்...
x
புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள திருமுக்குளம் உள்பட 4 குளங்களை சீரமைத்து, வளர்ச்சி பணி மேற்கொள்ள உத்தரவிடக் கோரி திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை 
விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இது குறித்து பதிலளிக்க  உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்