தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் கேரளாவில் கைது - அசாம் போலீசார் கொடுத்த தகவலின் பேரில் நடவடிக்கை

அசாம் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 3 பேரை கேரள போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் கேரளாவில் கைது - அசாம் போலீசார் கொடுத்த தகவலின் பேரில் நடவடிக்கை
x
அசாம்  தீவிரவாத அமைப்பை சேர்ந்த 3 பேரை கேரள போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாமில் என்.டி.எஃப்.பி. என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் கேரள மாநிலத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அவர்கள்  எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள குன்னத்துநாடு பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்ததாக அசாம் போலீசார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் வேலை பார்த்த நிறுவனத்தை சுற்றி வளைத்த கேரள போலீசார், 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேர் மீது கொலை, குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்