"மண்ணுக்கேற்ற சட்டங்கள் இங்கில்லை" - ஐஜி பொன்.மாணிக்கவேல் பேச்சு

மண்ணுக்கேற்ற சட்டங்கள் இல்லாததால் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதாக ஐஜி பொன்.மாணிக்கவேல் கூறினார்.
x
ரயில்வே துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான பாராட்டு விழா பெரம்பூர் ஐசிஎப் வளாகத்தில் நடந்தது. அம்பேத்கர் அரங்கில் நடந்த விழாவில், சிறப்பு விருந்தினராக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் கலந்து கொண்டு, திறமையான காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். பின்னர் பேசிய அவர், மண்ணுக்கேற்ற சட்டங்கள் இல்லாததால் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதாக கூறினார். குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களை மதிக்க வேண்டும் என காவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்