வாழும் கலை அமைப்பு சார்பில் புயல் நிவாரணம்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதி மக்களுக்கு, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதி மக்களுக்கு, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. கீழ்காடு, வடக்காடு, காதரிபுலம், மஞ்சகன்னிமருதூர், பிராந்தியக்கரை மற்றும் வடமழை கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்து தொள்ளாயிரத்து 75 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. அதேபோல், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, மருத்துவ குழுவினர் ஆலோசனைகளையும் வழங்கினர். இதுவரை 66 கிராமங்களில் உள்ள 8 ஆயிரத்து 375 குடும்பங்களுக்கு, 32 டன் எடையிலான நிவாரண பொருட்களை வழங்கியுள்ளதாக வாழும் கலை அமைப்பு தெரிவித்துள்ளது.
Next Story