நீட் தேர்வு எழுதும் ஏழை மாணவர்களுக்கு ஆசிரியர்களே கட்டணம் செலுத்த வேண்டும்
நீட் தேர்வு எழுதும் ஏழை எளிய மாணவர்கள் 5 பேருக்கு, ஆசிரியர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
வரும் மே மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ள நீட் போட்டித் தேர்வுக்கான ஆன்லைன் பதிவு வருகிற 30ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த தேர்வில் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்பதற்கு வசதியாக பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து தலா 5 மாணவர்கள் நீட் தேர்வில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. அந்த மாணவர்களுக்கான கட்டணத்தை ஆசிரியர்கள் செலுத்த வேண்டும் எனவும் கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலமாக 6 ஆயிரம் பள்ளிகளில் இருந்து 30 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதுவது உறுதியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த எண்ணிக்கையை அடுத்த கல்வியாண்டில் உயர்த்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கல்வித்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
Next Story