சேலம் : தடை செய்யப்பட்ட 3 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

சேலம் மாவட்டம் சூரமங்கலம் உழவர் சந்தை எதிரே உள்ள கடையில் பான்பராக் மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
சேலம் : தடை செய்யப்பட்ட 3 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்
x
சேலம் மாவட்டம் சூரமங்கலம் உழவர் சந்தை எதிரே உள்ள கடையில் பான்பராக் மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் தலைமையிலான அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கடையில் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த சுமார் 3 லட்சம் மதிப்பிலான 229 கிலோ குட்கா மற்றும் பான்பராக் பொருட்களை  பறிமுதல் செய்த அதிகாரிகள், கடைக்கு சீல் வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்