பெண்ணின் கண்ணீரைத் துடைத்த ஆளுநர் பன்வாரிலால்...
பதிவு : நவம்பர் 22, 2018, 04:14 PM
திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளை ஆளுநர் பன்வாரிலால் பார்வையிட்டார்.
திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளை ஆளுநர் பன்வாரிலால் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, உணவு துறை அமைச்சர் காமராஜ், ஆட்சியர் நிர்மல் ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். திருவாரூர் சன்னதி தெரு பகுதியில் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டபோது, அருள்ஜோதி என்ற பெண்,  வீடுகளை இழந்து பள்ளிகளில் தங்கியுள்ளதாகவும், இதுவரை நிவாரணம் எதுவும் கிடைக்கவில்லை எனவும் கூறி கதறி அழுதார். அவரது கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறிய ஆளுநர், அனைத்து நிவாரண உதவிகளும் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.  இதையடுத்து, மன்னார்குடி அருகே காத்தாங்குளம் என்ற கிராமத்தில், புயலால் சாய்ந்த உயர்மின் அழுத்த கோபுரம் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.


ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.