சேதம் குறித்து கணக்கெடுக்க அதிகாரிகள் வரவில்லை - மீனவர்கள் புகார்
கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை கணக்கெடுக்க அதிகாரிகள் வரவில்லை என கீச்சாங்குப்பம் மீனவ கிராம மக்கள் புகார்.
கஜா புயல் தாக்குதலில் நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் மீனவ கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசை வீடுகளும், 800-க்கும் மேற்பட்ட ஓட்டு வீடுகளும் சேதமடைந்துள்ளன. இதுவரை சேதம் குறித்து கணக்கெடுக்க அரசு அதிகாரிகள் யாரும் வரவில்லை என்று அப்பகுதி மீனவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். வீடு, உடைமைகளை இழந்த தங்களுக்கு அரசு தற்காலிக குடியிருப்புகள் கட்டித் தருவதுடன், இழந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story