தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கு - 3 பேர் விடுதலை

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த 3 போ் வேலூர் மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கு - 3 பேர் விடுதலை
x
சொத்து வழக்கில் கடந்த 2000ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் கலவரங்கள் வெடித்தது. அப்போது, தருமபுரியில் சுற்றுலா பேருந்துக்கு தீ வைக்கப்பட்டதில், 3 கல்லூரி மாணவிகள் உயிரிழந்தனர். இந்த வழக்கில் நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2010ஆம் ஆண்டு தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, அந்த 3 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்