மீனவர்களுக்கு உதவும் செல்போன் செயலி... அமைச்சர் ஜெயக்குமார் அறிமுகப்படுத்தினார்...

புயல், மழை உள்ளிட்ட காலங்களில் மீனவர்களுக்கு உதவும், செல்போன் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு உதவும் செல்போன் செயலி... அமைச்சர் ஜெயக்குமார் அறிமுகப்படுத்தினார்...
x
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், செயலியை வெளியிட்டார். இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி மூலம், புயல், மழை குறித்த எச்சரிக்கை குறித்த தகவல்களை, மீனவர்கள் அவ்வப்போது அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் கடல் பகுதியில் மீனவர்கள் இருக்கும் இடத்தையும் அறியலாம். சிக்னல் இல்லாத இடத்திலும் இந்த செயலி வேலை செய்யும். செயலி அறிமுக நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இந்த செயலி மீனவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.  நடுக்கடலில் மீனவர்கள் யாரும் இல்லை என்றும், மீனவர்கள் அனைவரும் அணையும் தளங்களில் பத்திரமாக உள்ளதாகவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்