திருவாரூர் தியாகராஜர் கோவிலில் 2-வது நாளாக தொடரும் 3ஆம் கட்ட ஆய்வு

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் தொல்லியல் நிபுணர்கள் 2வது நாளாக 3ஆம் கட்ட ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் 2-வது நாளாக தொடரும் 3ஆம் கட்ட ஆய்வு
x
தியாகராஜர் கோயிலின் பாதுகாப்பு மையத்தில் உள்ள சிலைகளில் உலோகங்களின் எடை, நீளம், அகலம் ஆகியவை அளவெடுக்கப்படுகிறது. அத்துடன், சிலைகளின் பழைய புகைப்படம் மற்றும் அளவுகளுடன் தற்போதுள்ள அளவீடுகள் ஒத்துபோகிறதா என ஆய்வு செய்யப்படுகிறது. 

இது குறித்து பேசிய தொல்லியல் துறை தென்மண்டல இயக்குனர் நம்பிராஜன், இதுவரை 1000 க்கும் மேற்பட்ட சிலைகளின் உண்மைத் தன்மை ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஆய்வின் முடிவுகள் நீதிமன்றத்தில் விரைவில் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் சிலைகள் ஆய்வு பணியின் போது கோயில் ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் நம்பிராஜன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்