20 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு வானிலை அறிக்கை சொல்லும் ஆசிரியர்

டெல்டா பகுதி விவசாயிகளுக்கு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆசிரியர் ஒருவர் வானிலை அறிக்கை சொல்லி வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
20 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு வானிலை அறிக்கை சொல்லும் ஆசிரியர்
x
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள மேலவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர் செல்வகுமார். இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக டெல்டா பகுதி விவசாயிகளுக்கு தனது வானிலை அறிக்கையை மிகத் துல்லியமாக அறிவித்து வருகிறார். தற்போதைய கஜா புயல் வேதாரண்யம் அருகே கரையை கடக்கும் என்றும், இதனால் விவசாயிகளும், மீனவர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் செல்வகுமார் தெரிவித்துள்ளார். மேலும், 22, 23-ஆகிய தேதிகளில் தமிழக கடலோர பகுதிகளில் பெய்யவுள்ள மழை, கஜா புயல் மழையை விட அதிகமாக இருக்க கூடும் எனவும் அவர் கூறியுள்ளார். கஜா புயலுக்கு பிறகு, வடகிழக்கு பருவமழை காலத்தில் மேலும் 6 புதிய புயல்கள் அடுத்தடுத்து உருவாகும் என்றும் வானிலை ஆர்வலர் செல்வகுமார் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்