கட்கிளாஷ் ஒர்க் அரசாணி பானை சிங்கப்பூர் பயணம்...

தஞ்சாவூரில் பாரம்பரிய கைவினைப் பொருளான 'கட்கிளாஷ் ஒர்க்' அரசாணி பானை முதன்முறையாக சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
கட்கிளாஷ் ஒர்க் அரசாணி பானை சிங்கப்பூர் பயணம்...
x
தமிழகத்தில் திருமண நிகழ்ச்சியின் போது, பாரம்பரிய அரசாணி பானை இடம் பெறுவது வழக்கம். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பலாபட்டு கிராமத்தில் வசித்து வரும் முத்துக்குமார் என்பவரது உறவினர் திருமண விழா சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மூன்றரை அடி உயரமுள்ள பானை செட் வகைகளை திருமண நிகழ்ச்சிக்காக அனுப்பி வைத்துள்ளார். வெளிநாடுகளிலும் இந்த அரசாணி பானை கலாச்சாரம் பின்பற்றப்படுவதற்கு கைவினைத் தொழிலாளர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்