முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா : "அரோகரா" முழக்கங்களுடன் பக்தர்கள் வழிபாடு

தமிழகத்தில் வேறெங்கும் நடைபெறாத தாரகாசுர சூரசம்ஹாரம் கழுகுமலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா : அரோகரா முழக்கங்களுடன் பக்தர்கள் வழிபாடு
x
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு மலையினை குடைந்து மன்னர்கள் காலத்தில் கழுகாசலமூர்த்தி கோவில்,அமைக்கப்பட்டது. சூரசம்ஹார நிகழ்ச்சியையொட்டி தாரகாசுரனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
அப்போது பக்தர்கள், அரோகரா கோஷம் எழுப்பி, வழிப்பட்டனர். நாளை, சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதால், அதனை காண ஏராளமான பக்தர்கள் அங்கு வருகை தந்துள்ளனர்.

சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேரோட்டம் :நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தங்க மயில் ரிஷப வாகனத்தில் சிங்காரவேலர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள், அரோகரா கோஷம் எழுப்பியபடி, நான்கு மாட வீதியில் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். முக்கிய நிகழ்வான, முருகக் கடவுள் தாயிடம் இருந்து வேல் வாங்கியதும் திருமேனி எங்கும் வியர்வை பொழியும் அருட்காட்சி இன்று மாலை நடைபெற உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்