விழுப்புரம் அருகே லாரி டிரைவர் வெட்டிக் கொலை - 24 மணி நேரத்தில் ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேர் கைது

விழுப்புரம் அருகே, லாரி ஓட்டுநர் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை போலீசார் 24 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் அருகே லாரி டிரைவர் வெட்டிக் கொலை - 24 மணி நேரத்தில் ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேர் கைது
x
விழுப்புரம் திருப்பாச்சனூர் மலட்டாற்றங்கரையோரம் இரு தினங்களுக்கு முன்பு,  இளைஞர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். அவர் அருகே இருசக்கர வாகனம் ஒன்றும் கிடந்துள்ளது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் இளையராஜா, விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து எஸ்.பி. ஜெயக்குமார்  தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இளைஞரின்  உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர் விழுப்புரம் அருகே ராமநாதபுரத்தை சேர்ந்த கந்தன் என்பது தெரிய வந்துள்ளது. லாரி டிரைவரான கந்தனுக்கும்,வேலு என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மோதலில், வேலுவின் சகோதரர் தற்கொலை செய்துள்ளார். இதற்கு பழிவாங்கவே இந்த கொலை செய்ததாக கைதான வேலு உள்ளிட்ட 4 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.  கைதானவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம்,  கத்திகளை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரையும் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி  கடலூர் சிறையில் அடைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்