பாலியல் வன்கொடுமையால் மாணவி உயிரிழந்த விவகாரம்: குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய அன்புமணி கோரிக்கை

மாணவி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, உயிரிழந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்று அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
பாலியல் வன்கொடுமையால் மாணவி உயிரிழந்த விவகாரம்: குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய அன்புமணி கோரிக்கை
x
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மாணவி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, உயிரிழந்த  விவகாரத்தில் காவல்துறையினர் அலட்சியம் காட்டாமல் குற்றவாளிகளை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்த வழக்கை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு  தமிழக அரசு 25 லட்சம் ரூபாய்  நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்