108 நாட்கள் ஆன்மீக அரசியல் பிரச்சார யாத்திரை - இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத்

தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் 108 நாட்கள் ஆன்மீக அரசியல் பிரச்சார யாத்திரை துவக்க விழா தாம்பரத்தில் இன்று நடைபெற்றது.
108 நாட்கள் ஆன்மீக அரசியல் பிரச்சார யாத்திரை - இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத்
x
* தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் 108 நாட்கள் ஆன்மீக அரசியல் பிரச்சார யாத்திரை துவக்க விழா தாம்பரத்தில் இன்று நடைபெற்றது.  பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோயில் முன்பு இந்த யாத்திரையை அக்கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன், கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்கார் பட பேனர்களை கிழிப்பதற்கு எதிராக விஜய்க்கு ஆதரவாக ரஜினிகாந்த் குரல் கொடுப்பது இயல்பானது என்றார். ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

* சர்கார் பட விவகாரம் தொடர்பான, ரஜினிகாந்த் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து  அதிமுக நாளிதழில் நேற்று கட்டுரை வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்