தென்கிழக்கு வங்கக் கடலில் உருவானது கஜா புயல்...

கஜா புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் 15ம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம்.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவானது கஜா புயல்...
x
* வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு "கஜா" என பெயரிடப்பட்டுள்ளதாக , இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், வங்க்கடலில் உருவான "கஜா" புயல் சின்னம் வடமேற்கு திசை நோக்கி மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து தமிழகம் நோக்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இது, தற்போது சென்னைக்கு வடகிழக்கே 990 கிலோ மீட்டரில் கடலில் மையம் கொண்டிருப்பதாகவும்,  வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இன்னும் 2 அல்லது 3 நாட்களில் தமிழகம் நோக்கி வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

* வரும் 15ஆம் தேதி வட தமிழகம், தெற்கு ஆந்திரா இடையே இந்தப் புயல் கரையைக் கடக்கும் என்றும், இதனால் வரும் 14ம் தேதி மாலை முதல் சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கனமழை பெய்ய  வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.



"15ம் தேதி கரையை கடக்கிறது 'கஜா' புயல்" - சென்னை வானிலை ஆய்வு மையம்  


சென்னைக்கு கிழக்கே 930 கிலோ மீட்டர் தொலைவில், 'கஜா' புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் மெதுவாக நகர்ந்து வருவதாகவும் கடலூர் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே வருகிற 15ம் தேதியன்று கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அப்போது மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் அவர் கூறினார். 

"கஜா" புயல்- முன்னேற்பாடுகள் தயார்" - பேரிடர் மேலாண்மை அலுவலர் சத்தியகோபால்


"கஜா"  புயலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாகவும், மாவட்டம்தோறும் மீட்புக் குழு 
எந்தநேரமும் தயாராக உள்ளதாகவும்,  தமிழக வருவாய் நிர்வாக ஆணையரும் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலருமான சத்தியகோபால் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்