30 அடி விவசாய கிணற்றில் தவறி விழுந்த காட்டுயானை

ஒசூர் அருகே 30 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி வி​ழுந்த காட்டுயானையை வனத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.
30 அடி விவசாய கிணற்றில் தவறி விழுந்த காட்டுயானை
x
ஒசூர் அருகே ஊடேதுர்க்கம் வனப்பகுதியிலிருந்து காட்டுயானைகள் கூட்டம் வரகானப்பள்ளி, உப்பு பள்ளம் ஆகிய கிராம பகுதிகளில் சுற்றி திரிகின்றன. இந்த கூட்டத்தில் இருந்த 8 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டுயானை ஒன்று அங்கிருந்த  30அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. தண்ணீர் இல்லாத அந்த கிணற்றில், யானை விழுந்த தகவல் அறிந்த கிராமத்தினர் இராயக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு  பள்ளம் தோண்டி நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர், 
யானையை பத்திரமாக மீட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்