பருவமழை காலத்திலும் தடையின்றி ரேஷன் கடைகள் இயங்கும் - அமைச்சர் காமராஜ்
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பொதுமக்களுக்கு தடையின்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவிட்டதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பொதுமக்களுக்கு தடையின்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவிட்டதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.திருவாரூர் மாவட்டத்தில் ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மழைக்கால வெள்ள பாதிப்புகளை தடுக்கும் விதத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மக்கள் பாதுகாப்பு கருதி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
Next Story