கனமழையால் தரைப்பாலம் சேதம் : சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை
பதிவு : நவம்பர் 04, 2018, 08:32 AM
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே, கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால், தற்காலிக தரைப்பாலம் ஒன்று சேதமடைந்துள்ளது.
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே, கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால், தற்காலிக தரைப்பாலம் ஒன்று சேதமடைந்துள்ளது.கட்டளை கிராமத்தையும், புலியூர்குறிச்சி கிராமத்தையும் இணைக்கும் இந்த பாலம் வெள்ளத்தில், அடித்து செல்லப்பட்டதால், அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பாலத்தை சீரமைத்து தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழை

தஞ்சை மற்றும் சுற்று வட்டாரங்களில், வடகிழக்கு பருவமழை, தொடங்கியுள்ள நிலையில், சூரக்கோட்டை வல்லம் மாரியம்மன் கோவில்,  கீழவாசல்,  நாஞ்சிக்கோட்டை , பள்ளி அக்கரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

மழையால் தீபாவளி வர்த்தகம் பாதிப்பு

கும்பகோணத்தில் நேற்று கனமழை பெய்ததால், தீபாவளிக்கு புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்குவதில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். இந்த மழையால் தங்களுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக வணிகர்கள் தெரிவித்தனர். 

40 ஆண்டுக்கு பின்னர் காவிரி நீரால் நிரம்பிய குளங்கள்

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள காக்கா குளம் 40 ஆண்டுகளுக்கு பின்னர்,  காவிரி நீரால் நிரம்பியது. திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் , மகாலிங்க சுவாமி கோயிலுக்கு சொந்தமான 33 தீர்த்தக்குளங்கள் தூர்வாரும் பணி நடைபெற்றது. பணிகள் முடிவடைந்த நிலையில், காவிரி ஆற்றிலிருந்து காக்கா குளம் மற்றும் காருண்ய தீர்த்த குளத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் தடையின்றி வருவதை மக்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து சென்றனர்.

திற்பரப்பு அருவியில் வெள்ளம் - சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக சிற்றாறு அணை ஒன்றில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனாலும் மழையாலும் திற்பரப்பு அருவியில் தற்போது வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கனமழை எதிரொலி - 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை எதிரொலி - 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

273 views

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் மிதமான மழை

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.

402 views

கேரள நிவாரண முகாமில் பாட்டு பாடி மக்களை உற்சாகப்படுத்திய பாடகி சித்ரா

கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள வெள்ள நிவாரண முகாமில் தங்கி இருக்கும் மக்களை பின்னணி பாடகி சித்ரா சந்தித்து நலம் விசாரித்தார்.

468 views

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

522 views

பிற செய்திகள்

கடலில் கச்சா எண்ணெய் கலப்பு: "மீன்வளம் பாதிக்கப்படுமோ என் மீனவர்கள் அச்சம்"

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் மீண்டும் கடலில் கொட்டிய கச்சா எண்ணெயால், மீன்வளம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மீனவர்கள் உள்ளனர்.

8 views

இன்று முதல் கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாற வாய்ப்பு இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

514 views

கடலில் மிதந்த மர்ம பொருளால் பரபரப்பு

புதுச்சேரி அருகே சின்ன காலாப்பட்டு கடலில் மர்ம பொருள் மிதந்ததால் மீனவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

3520 views

"மக்கள் மன்றம் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது" - பார்வையாளர்கள் கருத்து

தந்தி டிவியின் சார்பில் மதுரையில் நடத்தப்பட்ட மக்கள் மன்றம் நிகழ்ச்சி..

22 views

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி : தமிழகம் முழுவதுமிலிருந்து 150 பேர் பங்கேற்பு

மாநில அளவிலான குத்துச்சண்டை தகுதி போட்டி சென்னையில் நடைபெற்றது.

7 views

திருடு போன 217 செல்போன்களை மீட்ட போலீசார்

சென்னை திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் இந்த ஆண்டு திருடர்களால் திருடப்பட்ட 217 செல்போன்களை மீட்ட போலீசார்..

172 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.