புதிய தலைமை செயலக கட்டிட முறைகேடு புகார் விவகாரம் : தனிநீதிபதி உத்தரவுக்கு விதித்த தடை நவம்பர் 9 வரை நீட்டிப்பு...

புதிய தலைமை செயலக கட்டிட முறைகேடு புகார் தொடர்பான விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
புதிய தலைமை செயலக கட்டிட முறைகேடு புகார் விவகாரம் : தனிநீதிபதி உத்தரவுக்கு விதித்த தடை நவம்பர் 9 வரை நீட்டிப்பு...
x
* புதிய தலைமை செயலக கட்டிட முறைகேடு புகார் தொடர்பான வழக்கு, நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ் மற்றும் கல்யாணசுந்தரம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, புதிய தலைமை செயலக வழக்கில் குற்றவியல் நடவடிக்கை எடுக்க இதுவரை ஒரு ஆதாரமும் தாக்கல் செய்யவில்லை என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

* இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், புகார் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், விசாரணை முடிந்த பின்னர் தான் வழக்கு பதிவு செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார். 

* இதனையடுத்து இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்த நீதிபதிகள்,  லஞ்ச ஒழிப்புதுறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நவம்பர் 9ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்