4 லட்சம் வங்கி கடன் பெற்று பள்ளிக்கு கணினி மையம் அமைத்த அரசு ஆசிரியர்
பதிவு : நவம்பர் 02, 2018, 03:35 PM
மாற்றம் : நவம்பர் 02, 2018, 03:37 PM
தர்ம‌புரியில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர், 4 லட்சம் ரூபாய் வங்கி கடன் பெற்று தனது பள்ளிக்கு கணினி மையம் அமைத்து கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள ரேகடஅள்ளி அரசு பள்ளி ஆசிரியர் மதன கோபால், தனது பள்ளி மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை அறிமுகபடுத்த விரும்பியுள்ளார். அதன்படி முதற்கட்டமாக மாணவ மாணவிகளுக்கு கணினி குறித்த பயிற்சி அளிக்க நினைத்துள்ளார். பள்ளியில் கனிணி வசதி இல்லாத‌தால், ஆசிரியர் மதன கோபால், வங்கியில் 4 லட்சம் ரூபாய் வீட்டு கடனாக பெற்று, கணினி மற்றும் உபகரணங்களை வாங்கி கொடுத்து கணினி மையம் அமைத்துள்ளார். இதனை அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, ஆசிரியர் மதனகோபாலை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்த‌தோடு, கணினி மையத்தை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாணவர்கள் மீது கொண்ட அன்பாலும், தனது மனைவியின் ஒத்துழைப்பாலும் இது சாத்தியமானதாக, ஆசிரியர் மதன கோபால் தெரிவித்துள்ளார். வங்கி கடன் பெற்று, மாணவர்களுக்கு உதவிய ஆசிரியர் மதனகோபாலை மற்றும் அவரது மனைவியை மாணவர்களின் பெற்றோரும், அப்பகுதி மக்களும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கடந்த ஓராண்டாக வளர்ச்சி பணி முடக்கம் என எனக் கூறி அமமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்

கடந்த ஓராண்டாக தமிழக அரசு எந்தவொரு வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் அம்மா மக்கள் முன்னேற்றம் கழகத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

48 views

ஒரே நாளில் சிதிலமடைந்த தார் சாலை : கோபமடைந்த மக்கள் சாலை மறியல்

தருமபுரி மாவட்டத்தில் புதிதாக போடப்பட்ட தார்ச்சாலை ஒரே நாளில் சிதிலமடைந்ததால் கோபமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

171 views

கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் விழுந்த கார் : இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு

தர்மபுரி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த தங்கவேலு குடும்பத்தினருடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கார் மூலம் சென்ற போது கார் நிலைதடுமாறி சாலையோர கிணற்றுக்குள் விழுந்தது.

434 views

ஆடிப்பெருக்கு விழாவிற்காக ஒகேனக்கலில் மாவட்ட ஆட்சியர் பரிசலில் ஆய்வு

ஒகேனக்கலில் ஆடிபெருக்கு விழாவிற்காக சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்யவும், நீர்வீழ்ச்சியில் நீராடவும் விதித்த தடையை நீக்க மாவட்ட ஆட்சியர் ஒகேனக்கலில் ஆய்வு செய்தார்.

65 views

பிற செய்திகள்

இன்று முதல் கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாற வாய்ப்பு இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

247 views

"மக்கள் மன்றம் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது" - பார்வையாளர்கள் கருத்து

தந்தி டிவியின் சார்பில் மதுரையில் நடத்தப்பட்ட மக்கள் மன்றம் நிகழ்ச்சி..

20 views

திருடு போன 217 செல்போன்களை மீட்ட போலீசார்

சென்னை திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் இந்த ஆண்டு திருடர்களால் திருடப்பட்ட 217 செல்போன்களை மீட்ட போலீசார்..

145 views

ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு பிரசவம்

தாராபுரத்தில் ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு நடந்த பிரசவத்தில் அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது.

528 views

"புயல் அடித்தது முதல் பச்சை குழந்தைக்கு பால் இல்லை"- புயலால் பாதிக்கப்பட்டவர்

கஜா புயலால்,வேளாங்கண்ணி சுற்றியுள்ள,கைகாட்டி, பி.ஆர்.புரம், பூவைத்தேடி உள்ளிட்ட எட்டு வீடுகளை இழந்து 8 கிராம மக்கள் தங்குவதற்கு முகாம்கள் இல்லை என புகார்..

166 views

கஜா புயல் : தாக்குதலுக்கு ஆளான நாகை மாவட்டம்

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் கடல் நீர் விவசாய நிலத்திற்குள் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

61 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.