போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வி : வேலைநிறுத்தம் குறித்து நவ.2ல் அறிவிப்பு

காலவரையற்ற வேலைநிறுத்தம் எப்போது துவங்கும் என்பதை நவம்பர் 2ஆம் தேதி அறிவிக்க உள்ளதாக போக்குவரத்து தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வி : வேலைநிறுத்தம் குறித்து நவ.2ல் அறிவிப்பு
x
காலவரையற்ற வேலைநிறுத்தம் எப்போது துவங்கும் என்பதை நவம்பர் 2ஆம் தேதி அறிவிக்க உள்ளதாக, போக்குவரத்து தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தீபாவளி பண்டிகைக்கு முன்பணம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான நடவடிக்கை ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். சென்னை தேனாம்பேட்டையில் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் பாலசுப்பிரமணியன் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாததால், காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும், நவம்பர் 2ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தொமுச பொருளாளர் நடராஜன் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்