திருட்டு நகைகளை வங்கியில் அடகு வைத்த கொள்ளையன் - போலீசார் தீவிர விசாரணை

சென்னையில் உள்ள வங்கியொன்றில் அடகு வைக்கப்பட்ட திருட்டு நகைகள் ஏலம் விடப்பட்டது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருட்டு நகைகளை வங்கியில் அடகு வைத்த கொள்ளையன் - போலீசார் தீவிர விசாரணை
x
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தேசியமயமாக்கப் பட்ட வங்கி ஒன்றில் அடகு வைத்த நகைகள் கடந்த ஜூன் மாதம் ஏலம் விடப்பட்டன. அதில் கலந்து கொண்ட சீமான் என்பவர்  55 கிராம் எடையுள்ள தங்க நகைகளை ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.  அந்த நகைகளை வேறு இடத்தில் அவர் விற்று விட்டார்.

இந்நிலையில் சீமான் ஏலம் எடுத்த நகைகள் ஒரு கொள்ளையனால் வங்கியில் அடகு வைக்கப்பட்டதாக  கூறப்படுகிறது. இது தொடர்பாக சீமானை தொடர்பு கொண்ட போலீசார், அவர் ஏலம் எடுத்த நகைகள் திருட்டு நகைகள் என தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வங்கியே தொடர்பு கொண்ட போது உரிய விளக்கம் அளிக்கவில்லை என சீமானின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருட்டு நகைகள் வங்கியில் ஏலம் விடப்பட்ட சம்பவம் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.      Next Story

மேலும் செய்திகள்