ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளை : மத்திய பிரதேசத்தை சேர்ந்த மேலும் 5 பேர் கைது

ரயிலில் கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரை மத்திய பிரதேசத்தில் இருந்து சென்னைக்கு சிபிசிஐடி போலீஸார் கொண்டு வந்தனர்.
ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளை : மத்திய பிரதேசத்தை சேர்ந்த மேலும் 5 பேர் கைது
x
கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேலத்திலிருந்து சென்னைக்கு வந்த ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு 5  கோடியே 75 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். 

இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸார், கடந்த 13ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ், ரோகன் ஆகியோரைக் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். 

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளை கும்பலுக்கு தலைவனாக, அந்த மாநிலத்தைச் சேர்ந்த மோஹர் சிங் என்பவர் செயல்பட்டதும், குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் உட்பட மேலும் 4 பேர் அம்மாநில சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும் தெரிந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்து, சென்னை கொண்டு வந்த போலீஸார், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்