குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு..

குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு..
x
* குரூப்-1 தேர்வு தொடர்பாக வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என டிஎன்பிஎஸ்சி கேட்டுக் கொண்டுள்ளது.

* வணிகவரித் துறை உதவி ஆணையர்,  காவல்துறை டிஎஸ்பி உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளில் காலியாக உள்ள 70க்கும் அதிகமான பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு முதல் நிலை தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு நடைபெற்றது.

இந்த நிலையில் குரூப்-1 தேர்வில் முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகின.

* இதற்கு மறுப்பு தெரிவித்து டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,முதன்மை தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும் எனவும் ,   தேர்வு தொடர்பாக வரக்கூடிய வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளது.

* இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் எனவும்  தேர்வர்களை டி.என்.பி.எஸ்.சி. கேட்டுக் கொண்டுள்ளது.
Next Story

மேலும் செய்திகள்