அயோத்தி வழக்கு- உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

அயோத்தி வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளன.
அயோத்தி வழக்கு- உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
x
அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்மபூமி- பாபர் மசூதி பகுதியின் உரிமை தொடர்பாக நீண்ட காலமாக வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2 புள்ளி 77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என கடந்த 2010-ல் தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தையும் 3 நீதிபதிகள் அமர்வு, இன்று விசாரிக்கும் என கடந்த மாதம் 27-ஆம் தேதி, அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அறிவித்தது. தீபக் மிஸ்ரா ஓய்வு பெற்றதை தொடர்ந்து, தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, அயோத்தி வழக்கு இன்று விசாரிக்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்