தீபாவளி பண்டிகைக்கு தயாராகும் முந்திரி கொத்து
கன்னியாகுமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு தயாராகும் முந்திரி கொத்து குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...
தீபாவளி பண்டிகையில் சுவை கூட்டும் ஒரு சிறப்பாக இருப்பது இனிப்பு வகைகள் தான். வித விதமான இனிப்புகளை செய்யவும், சுவைக்கவும் அனைவரும் ஆர்வமாக இருப்பார்கள். நண்பர்கள், உறவினர்களுக்கு கொடுக்க இனிப்பு வகைகளை மொத்தமாக ஆர்டர் கொடுப்போரும் உண்டு. கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்புகளில் ஒன்றான முந்திரி கொத்துக்கு ஏராளமான ஆர்டர்கள் குவிந்து வருகிறது. பாசிப்பருப்பு, கருப்பட்டி, ஏலக்காய், தேங்காய், எள்ளு, அரிசிமாவு இவைகளை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு சத்தான இனிப்பு வகை தான் இது.
பெயர் தான் முந்திரிக் கொத்தே தவிர, இதில் முந்திரி சேர்க்கப்படுவதில்லை. மொறு மொறுவென உள்ள இந்த இனிப்பு வகை தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் பிரசித்தம்., காற்று புகாத பாட்டிலில் போட்டு வைத்திருந்தால் 2 மாதங்கள் வரை கெடாது என்பதால் இதனை இப்போதே ஆர்டர் கொடுத்து வருகின்றனர். தித்திக்கும் சுவை கொண்ட இந்த இனிப்பு வகை ஒரு கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் மொத்தமாக ஆர்டர்களை கொடுக்கும் வியாபாரிகளும் உண்டு. கன்னியாகுமரி மாவட்டத்தில் முந்திரி கொத்துகளை தயாரிக்கும் பணியில் பல ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தித்திக்கும் தீபாவளியை சத்தான பலகாரங்களை கொண்டு கொண்டாடுவதில் மக்களும் முனைப்பாகவே இருக்கிறார்கள்...
Next Story