ஆசிரியர் இடமாற்றம் கண்டித்து போராட்டம் : 3 பேர் கைது - 2 ஆசிரியர்களுக்கு வலை

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கே.மோரூரில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆசிரியர் இடமாற்றம் கண்டித்து போராட்டம் : 3 பேர் கைது - 2 ஆசிரியர்களுக்கு வலை
x
போராட்டத்தை தூண்டி விட்டதாக கூறி அந்தப் பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் உட்பட 5 பேர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதன்படி, விசாரணை நடத்திய போலீஸார் அப்பகுதியைச் சேர்ந்த சின்னுசாமி, மாது, குமரவேல் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவான ஆசிரியர்கள் சுரேஷ்பாபு, கோவிந்தராஜ் ஆகியோரை தீவட்டிப்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்