தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கு : அதிமுகவினர் 3 பேரை விடுவிக்க ஆளுநர் மறுப்பு
தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அ.தி.மு.க.வினர் 3 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசு வைத்த கோரிக்கையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நிராகரித்துவிட்டார்.
தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கு தொடர்பாக அதிமுகவை சேர்ந்த நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுளாக குறைத்து கடந்த 2016-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டு தண்டனை அனுபவித்த ஆயுள் கைதிகள் ஆயிரத்து 800 பேரை விடுவிப்பதாக தமிழக அரசு அறிவித்தது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், பேருந்து எரிப்பு வழக்கில் தொடர்புடைய அதிமுகவினர் 3 பேரை விடுவிக்க ஆளுநர் மறுத்து அந்தக் கோப்பை அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டார்.
Next Story