"சபரிமலைக்கு பெண்கள் செல்ல மாட்டோம்" - உறுதிமொழி எடுத்த ஐயப்ப பக்தர்கள்
சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திருவொற்றியூரில் ஐயப்ப பக்தர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தியாகராஜ சுவாமி கோவிலில் இருந்து பஜனை கோஷங்களுடன் செண்டை மேளம் முழங்க 500க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். காலடிப்பேட்டை பெருமாள் கோவில் அருகே
நின்ற ஐயப்ப பக்தர்கள் அங்கு 10 வயதுக்கு மேற்பட்டும் 50 வயதுக்கு குறைவாகவும் பெண்களை சபரிமலைக்கு அனுப்ப மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
Next Story