கோயம்பேட்டில் ஜாமீனில் வந்த சிறுவன் வெட்டிக் கொலை
சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த சிறுவனை கோயம்பேட்டில் முன்விரோதம் காரணமாக மர்மகும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். தனது காதலியை கிண்டல் செய்ததற்காக, மெட்டுக்குளம், பாரதியார் தெருவை சேர்ந்த கணேஷ் என்ற இளைஞரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளான். இந்த வழக்கில் வெளியில் வந்த போது தான் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. கோயம்பேடு போலீசார் நடத்திய விசாரணையில், அண்ணனை கொலை செய்ததற்கு பழிவாங்க, கணேசின் தம்பி, பிரகாஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, 5 பேரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story